• Nov 07 2025

இவரு கல்யாணம் பண்ணி குழந்தை கொடுக்க, அவ protect பண்ணுவா.? ஜாய் அட்டாக்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்ருதி என்ற பெண்ணை முதலாவதாக திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. அதற்கு பிறகு ஜாய் கிரிஸில்டாவை  காதலித்து ரகசியமாக திருமணம் செய்தார். 

ஆனால் தற்போது அந்த திருமணம் மிரட்டலின் பெயரில் நடைபெற்றதாகவும், ஜாய் தன்னை பணத்திற்காக  மிரட்டியதாகவும்,  டிஎன்ஏ டெஸ்டில் குழந்தை என்னுடையது என்று உறுதியானால் அந்த குழந்தையை காப்பாற்றுவேன் என்றும் மாத்தம்பட்டி  தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து   ஜாய் கிரிஸில்டா நான் அப்போதே டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க சொன்னேன் தானே, நீங்க  டெஸ்ட் ரிப்போர்ட்ட கூட மாத்துவீங்க,  என்னுடைய குழந்தை  சொல்ல முடியாத கட்டத்தில் ஹாஸ்பிடலில் வைச்சு இருக்காங்க.. ஆனா அந்த குழந்தையை இப்போ கூட நீங்க கொச்சைப்படுத்துறீங்க.. இந்த சாபம் உங்களை சும்மா விடாது என்று அழுது வீடியோ வெளியிட்டு இருந்தார். 


அதன் பின்பு  மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி, ஜாய் கிரிஸில்டா ரங்கராஜை  மிரட்டி தான் திருமணம் செய்தார். அவருடைய கோரிக்கைகள் இவைதான் என்று ஒரு லிஸ்ட் அனுப்பி இருந்தார்.  மேலும் நான் எப்போதும் எனது கணவருக்கு துணையாய் நின்று காப்பாற்றுவேன் என்றும் குறிப்பிட்டார். 

இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ் அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜை ஸ்கிரீன்ஷாட் எடுத்து  தனது இன்ஸ்டா  பக்கத்தில் பகிர்ந்து உள்ளதோடு அதில், இவரு வருவாராம் கல்யாணம் பண்ணுவாராம் குழந்தை குடுப்பாராம்... அப்புறம் ஓடி போவாராம்.. பெண்கள் வாழ்க்கையை அழிப்பாராம்.... இதுல இவங்க protect பண்ணுவாங்கலாம்.. என்ன கருமம் டா இது.. உருகி உருகி லவ் பண்ணிட்டு blackmail னு சொன்னா எப்புடி so called husband..  என்று பதிவிட்டுள்ளார்.

இவ்வாறு மாதம்பட்டி  ரங்கராஜ் ஒருவருக்காக இருவரும் அடித்துக் கொண்டுள்ளதோடு அவர் தொடர்பிலான வீடியோக்கள், புகைப்படங்கள், ஆதாரங்கள் என்பவற்றை தொடர்ச்சியாக ஜாய் வெளியிட்டு வருகின்றார்.  எனவே இந்த சக்காளத்தி  சண்டைக்கு ஒரு  முற்றுப்புள்ளி கிடையாதா  ரசிகர்கள்  கேலி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 




 

Advertisement

Advertisement