• Sep 14 2024

ரசிகர்களுக்கு சாப்பாடு போட்டு அழகு பார்த்த விக்ரம்! லவ் யூ சொல்லி அன்பை காட்டிய ரசிகர்கள்.!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தங்கலான் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது. இதுவரை எந்த படங்களுமே புரியாத சாதனையாக முதல் நாளிலேயே 26.44 கோடிகளை வசூலித்து சாதனை படைத்துள்ளது. பா.ரஞ்சித் இயக்கிய இந்த திரைப்படத்தில் நடிகர் சியான் விக்ரமுடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். 


ஒரு வரலாற்றை 200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவங்களை பார்வையாளர்களின் மனதில் பதியும்படி ஒரு வரலாற்று படம் எடுத்து அசத்தியுள்ளார் பா ரஞ்சித். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையும் பக்க பலமாக அமைந்துள்ளது.


தங்கலான் படம் ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே 26. 44 கோடிகளை வசூலித்திருந்தது. அதன் பின்பு இரண்டாவது நாளில் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தங்கலான் சக்ஸஸ் மீட்டில் சீயான் விக்ரம் அவர்கள் தனது ரசிகர்களுக்கு சாப்பாடு போடும் வீடியோ வைரலாகி வருகிறது அதில் ரசிகர் ஒருவர் ஐ லவ் யு சார் என்று சொல்ல மீட் யூ சொல்கிறார். இதோ அன்ஹா வீடியோ.  


Advertisement

Advertisement