• May 05 2026

வசூலில் வரலாறு படைத்த ‘மன சங்கர வர பிரசாந்த் காரு’.. 5 நாட்களில் இத்தனை கோடி வசூலா.?

shali / 3 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில், இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கியுள்ள திரைப்படம் தான் ‘மன சங்கர வர பிரசாந்த் காரு’. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்த படம் ஜனவரி 12, 2026 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றதுடன், பாக்ஸ் ஆபிஸிலும் அதிரடி வசூலை குவித்து வருகிறது.


சிரஞ்சீவி மற்றும் அனில் ரவிபுடி கூட்டணி என்பதாலேயே, ‘மன சங்கர வர பிரசாந்த் காரு’ படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். 

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை பெற்றுள்ள நயன்தாரா, சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருப்பது ரசிகர்களிடையே கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதேபோல், இரண்டாவது நாயகியாக கேத்ரின் தெரசா நடித்துள்ளார். இவர்களின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் தரவுகளின்படி, ‘மன சங்கர வர பிரசாந்த் காரு’ திரைப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ.226 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, தெலுங்கு மாநிலங்களில் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு மிகவும் அபாரமாக உள்ளது. 5வது நாளில் கூட திரையரங்குகளில் கூட்டம் குறையாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement