• Jan 15 2025

விஜய் படத்திற்காக இப்படி செய்யலாமா? மமிதா பாஜூ செய்த துரோகம்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 69’ திரைப்படத்தில் மமிதா பாஜூ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்திற்காக அவர் ஏற்கனவே கமிட்டான ஒரு படத்தில் இருந்து கடைசி நேரத்தில் விலகி விட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’பிரேமலு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான மமிதா பாஜூ, அதர்வா நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்த படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மமிதா பாஜூவுக்கான பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. அதுமட்டுமின்றி அவருக்காக லட்சக்கணக்கில் காஸ்டியூம் டிசைனும் முடித்து விட்டு இன்னும் சில நாட்களில் அமெரிக்காவுக்கு படக்குழுவினர் படப்பிடிப்புக்காக செல்ல இருந்தனர்.

இந்த நிலையில் தான் திடீரென ’தளபதி 69’ படத்தில் மமிதா பாஜூ நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அவர் அந்த படத்தில் இருந்து விலக இருப்பதாக கூறுப்படுவது படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல லட்சங்கள் அவருக்காக செலவு செய்து காஸ்டியூம் டிசைன் செய்தது மட்டுமின்றி விசாவும் எடுத்து படப்பிடிப்புக்கு தயாராக இருக்கும் நிலையில் கடைசி நேரத்தில் இப்படி காலைவாரிவிட்டார்  என்று தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



மேலும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சிறிது காலதாமதமாக கால்ஷீட் கொடுங்கள் என்று கூட இறங்கி வந்தும் கூட மமிதா பாஜூ ஒப்புக்கொள்ளவில்லை என்றும் விஜய் படம் தான் தனக்கு முக்கியம் என்று ஒரேடியாக மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியில் இருக்கும் அதர்வா படக்குழுவினர் வேறு ஒரு நாயகியை தேடி வருவதாகவும் இதனால் படப்பிடிப்பு தள்ளி செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் படத்தின் வாய்ப்பு வந்தது என்பதற்காக அதர்வா படக்குழுவினர்களுக்கு மமிதா பாஜூ  செய்த துரோகம் குறித்து தான் தற்போது கோலிவுட் திரை உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement