• Jan 19 2025

மலையாள ஹீரோயின் மேடையில் கொடுத்த சப்ரைஸ்! வாயில் கைவைத்த பாலா! அப்பிடி என்னப்பா பண்ணாங்க?

Nithushan / 9 months ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகர்களை விட ட்ரெண்டிங்கில்  இருக்கும் சின்னத்திரை நாயகன் என்றால் அது kpy பாலா மட்டுமே ஆகும். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் ஊடாக அறிமுகமாகி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலா. இவர் தான் உழைக்கும் பணத்தில் பல ஏழை மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகின்றார். 


இவ்வாறு கலியுக கர்ணனாக இருக்கும் இவர் பல அவார்ட் ஷோக்களையும் தலைமை தாங்கி  நடத்தி வருபவர். அவ்வாறே சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகை சானியா ஐயப்பன், பாலாவை வாயடைக்கும் படி ஒரு செயலை செய்துள்ளார். 


சமீபத்தில் ஜுவராஜ் தயாளன் இயக்கத்தில் சானியா ஐயப்பன் இறுக்கப்பற்று என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். குறித்த படத்தில் இவரது நடிப்புக்காக விருதொன்று வழங்கப்பட்ட போது ஆங்கராக இருந்த பாலா அவருடன் நகைச்சுவையாக கதைத்து அவருடன் நடனமும் ஆடியுள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர் மேடையை விட்டு இறங்கும் போது "this guy so sweet " என கூறினார், இதை கேட்ட பாலா ஆச்சரியமடைந்து வாயில் கை வைத்துள்ளாராம்.

Advertisement

Advertisement