• Apr 16 2024

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் முக்கிய பிரபலங்கள்...இதை யாரும் எதிர்பார்க்கலையே..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர்  விஜய். இவர் தற்போது வம்சியின் இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

மேலும் இப்படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடிக்க சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷ்யாம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது.

தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வாரிசு வெளியாவதால் ரசிகர்கள் இப்படத்தை காண ஆவலாக இருக்கின்றனர்.

இதையொட்டி இப்படத்தில் இருந்து கடந்த மாதம் ரஞ்சிதமே என்ற பாடல் வெளியான நிலையில் சில நாட்களுக்கு முன்பு தீ தளபதி பாடல் ரிலீசானது. சிம்பு பாடிய இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது.

இதன் காரணமாக இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பானது.இவு்வுர்றஇருக்கையில்  தற்போது ரசிகர்கள் வாரிசு படத்தின் ட்ரைலரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.அநேகமான புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் ட்ரைலர் அல்லது டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதைத்தொடர்ந்து டிசம்பர் 24 ஆம் தேடி வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற இருக்கின்றது. மேலும் இதில் விஜய்யின் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வோரின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அவ்வாறு உலகநாயகன் கமல்ஹாசன், தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு, ஷாருக்கான் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் இது உண்மை தகவலா என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement