• May 19 2024

இளஞ்சிங்கம் போன்று காட்சியளிக்கும் கார்த்தி…அழகில் அண்ணனை மிஞ்சி விட்டாரே…வெளியான புகைப்படம் ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக முன்னேறி வருபவர் நடிகர் கார்த்தி. இவர் 2007 இல் வெளியான 'பருத்தி வீரன்' என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இந்தப் படத்திற்காக இவர் 'சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது', 'தமிழக அரசு சிறந்த நடிகர் விருது', 'விஜய் விருது (சிறந்த அறிமுக நடிகர்)' போன்ற பல விருதுகளை பெற்றுக் கொண்டார்.

தனது அறிமுகத் திரைப்படத்திலேயே திறமையான நடிப்பின் மூலம் சிறந்த தமிழ் நடிகருக்கான விருதினை பெற்றுக் கொண்ட கார்த்தி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துக்கொண்டார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளிவந்த படங்களாக 'பருத்தி வீரன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'பையா', 'நான் மகான் அல்ல', 'சிறுத்தை', 'கோ', 'சகுனி', 'அலெக்ஸ் பாண்டியன்', 'ஆல் இன் ஆல் அழகு ராஜா' போன்ற பல படங்களை குறிப்பிடலாம். அதுமட்டுமல்லாது தற்போது நடிகர் கார்த்தி 'பொன்னியின் செல்வன்', 'சர்தார்', 'விருமன்' போன்ற படங்களை நடித்து முடித்துள்ளார்.

மேலும் ராஜுமுருகன் இயக்கத்தில் டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இப் படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை ராஜு முருகன் தற்போது முடித்துள்ளதாக திரைவட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கான ஒளிப்பதிவினை ரவி வர்மன் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் படப்பிடிப்பிற்க்காக நீண்டகாலமாக தாடி மீசை கெட்டப்பில் இருந்த நடிகர் கார்த்தி தற்போது புதிய தோற்றத்தில் கம்பீரமாக இளஞ்சிங்கம் போன்று காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "அழகில் அண்ணனை மிஞ்சி விட்டாரே தம்பி" எனக்கூறி வருவதோடு மட்டுமல்லாமல் அப்புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வைரலாக்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement