• Jan 15 2025

நெட்பிளிக்ஸ் தளத்தில் புதிய சாதனை படைத்த மகாராஜா! கதறும் ஹிந்தி படங்கள்.. முழு விபரம்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே மகாராஜா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று காணப்படுகின்றது. தனக்கேற்ற வகையில் வித்தியாசமான திரைக் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதில் விஜய் சேதுபதி முக்கிய இடத்தில் காணப்படுகின்றார்.

இவர் நடிகராக மட்டுமில்லாமல் வில்லன் கேரக்டரிலும் சிறப்பாக நடித்துள்ளார். அதன்படி உலக நாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் படத்திலும்,  இளைய தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடித்து அசத்திய விஜய் சேதுபதி, அட்லி தயாரிப்பில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்திலும் வில்லனாக மிரட்டி இருந்தார்.

இதை தொடர்ந்து குரங்கு பொம்மை படத்தை இயக்கிய இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் மகாராஜா. இந்த படத்திற்கு திரையரங்குகளில் மிகப்பெரிய  வரவேற்பு கிடைத்த நிலையில் படம் எப்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.


அதன்படியே கடந்த ஜூலை 12 தேதி மகாராஜா திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அன்றைய நாளே  ஓடிடியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் ஓடிடி தளத்தில் வெளியான முதல் வாரத்திலேயே 3.2 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று ஹிட் லிஸ்டில் நாளாவது இடத்தை பிடித்தது. அடுத்த வாரம் மேலும் பார்வையாளர்கள் 6.1  மில்லியன் அளவில் பெற்று அடுத்த வாரமும் ஹிட் லிஸ்டிலும் மூன்றாவது இடத்தை பிடித்தது.

இவ்வாறு மொத்தமாக 18.9 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்ற மகாராஜா திரைப்படம் ஏனைய படங்களை விட அதிக பார்வையாளர்களை ஈர்த்து இந்த வருடத்தில் அதிக பார்வையாளர்களைப் பெற்ற  இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement