• Jan 15 2025

பல விமரசன்களை கடந்து 2வது திருமண ஆண்டை கொண்டாடும் மகாலட்சுமி! க்யூட் போட்டோஸ்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் நடிகை, தொகுப்பாளனி என பன்முகம் கொண்டு திகழும் மகாலட்சுமிக்கும் திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணம் பல விமர்சனத்திற்கு உள்ளானதோடு இவர்கள் கூடிய விரைவிலேயே பிரிந்து விடுவார்கள் என பலரும் கூறி வந்தார்கள்.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் தான் மகாலட்சுமி. அதன்பின்பு அனில் என்பவரை திருமணம் செய்தார். சிறிது காலம் சின்னத்திரையில் இருந்து விலகிய மகாலட்சுமி, மகன் பிறந்து சிறு வருடங்கள் கழித்து மீண்டும் சீரியல் நடிகையாக அறிமுகம் ஆனார்.

இவர் சின்னத்திரையில் நடிக்க தொடங்கிய சில வருடங்களையே அவருடைய முதலாவது கணவர் அனிலிடம் இருந்து விவாகரத்து பெற்றார். அதன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை திடீரென திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். இவர் பணத்துக்காக தான் ரவீந்தரரை திருமணம் செய்து கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன.


ஆனாலும் பலரது விமர்சனங்களை எல்லாம் தாண்டி தற்போது வரையில் மகாலட்சுமியும் ரவீந்தரரும் சந்தோஷமாகத்தான் வாழ்ந்து கொண்டுள்ளார்கள். ரவீந்தர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிய போதும் தனது மனைவியை கவனிப்பதில் அவர் அக்கறை காட்டி வருகின்றார்.

இந்த நிலையில், இன்றைய தினம் ரவீந்தரர் - மகாலட்சுமி தம்பதியினர் தமது இரண்டாவது திருமண நாளை கொண்டாடுகிறார்கள். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரவீந்தர். மேலும் மகாலட்சுமிக்கு அவர் கொடுத்த கிப்ட்களும் தற்போது வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement