• May 05 2024

மாஸாக உருவாகவுள்ள 'விடாமுயற்சி'... வீடியோ மூலம் சூப்பர் அப்டேட் கொடுத்த மகிழ்திருமேனி..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

இந்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியானது. விஜய்யின் வாரிசுக்குப் போட்டியாக வெளியான துணிவு திரைப்படமானது பாக்ஸ் ஆபிஸில் மரண மாஸ் காட்டியது. அஜித்துக்கு தரமான கம்பேக் கொடுத்த துணிவு, 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்தமை குறிப்பிடத்தக்கது.


இதனைத் தொடர்ந்து மகிழ் திருமேனி ஏகே 62 படத்தின் இயக்குநராக கமிட்டானார். அதன்படி, ஏகே 62 படத்துக்கு விடாமுயற்சி என டைட்டில் கன்ஃபார்ம் ஆனதுடன், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அஜித் தொடர்ச்சியாக பைக் டூர் சென்றுகொண்டிருப்பதால் இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் விடாமுயற்சி அப்டேட் எப்போது வெளியாகும் என கேட்ட வண்ணம் இருக்கின்றனர். 


இந்நிலையில் இயக்குநர் மகிழ்திருமேனி அவர்கள் வீடியோ ஒன்றின் மூலமாக சூப்பர் அப்டேட் ஒன்றினை கொடுத்துள்ளார். அதாவது இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் நடித்த வேதாளம் படத்தில் இடம்பெற்றிருக்கும் வீர விநாயகா என்ற பாடலைப் பகிர்ந்து விடாமுயற்சி படத்தின் அப்டேட் விரைவில் என்று பதிவிட்டிருந்தார். 

அந்தவகையில் வருகின்ற செப்டம்பர் 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வரவிருக்கும்  நிலையில் விடாமுயற்சி படத்தின் அடுத்த அப்டேட் அன்றைய தினம் வெளியாகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து இருக்கின்றனர். 


Advertisement

Advertisement

Advertisement