இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் சின்னச் சின்ன ஆசை. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் இந்திரன்ஸ் மற்றும் மதுபாலா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், சின்ன சின்ன ஆசை திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
இந்த திரைப்படம் காசியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. அங்கு வழிதவறி தனிமையில் சிக்கிக்கொள்ளும் மதுபாலா, அவளுக்கு உதவியாக வரும் இந்திரன்ஸ் ஆகியோரின் உறவு, மனித நேயம் மற்றும் உணர்ச்சி பிணைப்பை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.
தனிமை, நம்பிக்கை, மனித உறவுகளின் ஆழம் ஆகியவற்றை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்யும் முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா. மேலும் இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா மற்றும் ஜாஃபர் இடுக்கி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
புதிதாக வெளியான டிரைலரில், காசியில் தனியாக தவிக்கும் மதுபாலாவுக்கு இந்திரன்ஸ் ஆதரவாக இருப்பது, அவரை பாதுகாக்கும் காட்சிகள் மற்றும் இருவருக்கிடையே உருவாகும் மென்மையான மனித உறவு ஆகியவை உணர்வுகளைத் தொட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் இந்த காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த திரைப்படம் வரும் ஜூன் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Listen News!