• Jul 28 2026

லாரன்ஸ் பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதா? ஓயாத சர்ச்சை.! பொங்கியெழுந்த சேரன்

shali / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புதிய வீட்டிற்கு குடியேறும்போது அந்த பகுதியின் தெரு நாய்கள் கூட நம்மைப் பார்த்து குரைக்கும்; அதுபோல புதிய ஆட்சியையோ அல்லது சூழலையோ புரிந்துகொள்ள சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தாம் பேசியதாக லாரன்ஸ் தெரிவித்திருந்தார். 

ஆனால் அவரது பேச்சில் இடம்பெற்ற தெரு நாய்கள் என்ற வார்த்தை சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை கிளப்பின.


இந்த விவகாரத்தில் இயக்குநர் சேரன் தனது எக்ஸ் தள பதிவில் லாரன்ஸை கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களை தெரு நாய்களுடன் ஒப்பிட்டு பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், வாக்காளர்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் இந்த கருத்து அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், மக்களின் எதிர்ப்புக் குரல்களை சலுகைகள் மூலம் அடக்கலாம் என்ற எண்ணம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்.

சர்ச்சை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார். மக்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் தான் பேசவில்லை என்றும், புதிய சூழலை ஏற்றுக்கொள்வதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்ற கருத்தை மட்டுமே எடுத்துரைத்ததாகவும் கூறியுள்ளார். 

முழு வீடியோவையும் பார்த்து தனது கருத்தை சரியாகப் புரிந்துகொள்ளுமாறு அவர் அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார். இருப்பினும் இந்த விவகாரம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் தொடர்ந்து விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement