• Jul 28 2026

இன்னும் பல ஆண்டுகளுக்கு இதுதான் நடக்கும்.! – தமிழக அரசியல் குறித்து FEFSI விஜயன் கணிப்பு

shali / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் FEFSI விஜயன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேச்சில், விஜய்யை தோற்கடிக்க சில இடங்களில் பணம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் பணம் வாங்கியவர்கள் இறுதியில் வேறு பக்கம் வாக்களித்ததாகவும் அவர் கூறிய தகவல்கள் பரவி வருகின்றன. 

மேலும், “10 பைசா கூட செலவு செய்யாமல் வெற்றி பெற்றது TVK மட்டும் தான்....” எனவும் அவர் கூறியிருந்தார். 


அதே பேச்சில், நம்பிக்கை மற்றும் எதிர்காலத்திற்கான உறுதி தான் முக்கியம் எனவும், அந்த நம்பிக்கையை நடிகர் விஜய் உருவாக்கியுள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். “குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை TVK என்று பேசும் நிலை உருவாகியுள்ளது. இன்னும் பல ஆண்டுகள் அந்த தாக்கம் குறையாது” எனவும் தெரிவித்துள்ளார். 

இந்த கருத்துகள் தற்போது அரசியல் சார்ந்த விவாதங்களை தூண்டியுள்ளது. அதே நேரத்தில், சிலர் இதை ஆதரித்து அவரது கருத்தை அரசியல் மாற்றத்தின் பிரதிபலிப்பாக பார்க்கின்றனர்.

Advertisement

Advertisement