• Apr 20 2024

”லவ் டுடே” பிரதீப்பின் அடுத்த பிளாக் பஸ்டர் படம் ரெடி....வெளியானது செம அப்டேட்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

Love Today பிளாக் பஸ்டர் வெற்றி படத்தை கொடுத்த பிரதீப் ரங்கநாதன் அடுத்தாக யாரை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது. ஒரு பக்கம் அவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளது.

ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கிடையில், தற்போது பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கவுள்ள படம் குறித்த புதிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி, அவர் அடுத்ததாக ஒரு திரைப்படத்தை அவரே இயக்கி அவரே ஹீரோவாக நடிக்கவுள்ளாராம்.

அவர் இயக்கி நடிக்கவுள்ள அந்த படத்தை லவ் டுடே படத்தை தயாரித்த AGS நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளார்களாம்.இந்த படம் இன்ஜினியரிங் மாணவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டதாக இருக்கும் எனவும் தகவல்கள் கசிந்துள்ளது.

விரைவில் அவர் நடிக்கும் அடுத்த படத்திற்கான அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழில் லவ் டுடே  படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியில்  ரீமேக் செய்யப்படவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement