• Feb 05 2026

கழுகிடம் தோற்றதா காகம்... ஜெய்லர் வசூலை முறியடிக்க திணறும் லியோ... கடைசியில் இத்தனை கோடிதான் வசூலா...

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான லியோ படம் உலகளவில் வசூலில் சாதனை படைத்து வருகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், ஜெயிலர் படத்தின் வசூலை முறியடித்ததா இல்லையா என தற்போது திரை வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படம் கண்டிப்பாக நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் மொத்த வசூலையும் முறியடிக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.இருப்பின்னும் ஜெயிலர் படம் உலகளவில் ரூ. 625 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. 


ஆனால் தற்போது லியோ இதுவரை உலகளவில் ரூ. 570 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. இன்னும் சில நாட்கள் திரையரங்கில் ஓடினாலும் கூட குறைந்தபட்சம் ரூ. 575 கோடிக்கும் மேல் தான் உலகளவில் லியோ வசூல் வரும் என சினிமா வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. இதனால் கண்டிப்பாக ஜெயிலர் படத்தின் மொத்த வசூலையும் லியோ முறியடிக்காது என தெரிகிறது

Advertisement

Advertisement