• Apr 07 2026

தனுஷை இழந்தது என் வாழ்வின் பெரிய இழப்பு.! மனம் திறந்த இயக்குநர் விக்னேஷ் சிவன்

shali / 2 days ago

Advertisement

Listen News!

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சினிமா பயணத்தில் சந்தித்த முக்கியமான உறவுகள் மற்றும் பிரிவுகள் குறித்து சமீபத்தில் உருக்கமாக பேசியுள்ளார். சிம்பு நடிப்பில் வெளியான ‘போடா போடி’ மூலம் அறிமுகமான அவர், அந்த படம் பெரிய வெற்றி பெறாதபோதிலும், தனுஷ் அவர் மீது நம்பிக்கை வைத்து தனது தயாரிப்பில் ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார். அந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்தனர்.


இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக, திட்டமிட்டதை விட அதிக செலவுகள் ஏற்பட்டதாகவும், அதனால் தனுஷ் மற்றும் விக்னேஷ் சிவன் இடையே கருத்து வேறுபாடு உருவானதாகவும் கூறப்படுகிறது. பின்னர், நயன்தாரா தனது சொந்த செலவில் படத்தை முடிக்க உதவியதாகவும் தகவல்கள் பரவின. இதன் பின்னர், தனுஷ் மற்றும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா இடையிலான உறவு பாதிக்கப்பட்டதாக பேசப்பட்டது.

மேலும், நயன்தாராவின் திருமண வீடியோ தொடர்பான சர்ச்சையும் இந்த உறவை மேலும் சிக்கலாக்கியது. இருப்பினும், சமீபத்திய பேட்டியில் விக்னேஷ் சிவன், தனுஷ் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தியுள்ளார். 

“அவர் சாப்பிட்டால் தான் நான் சாப்பிடுவேன் என்ற அளவுக்கு நெருக்கம் இருந்தது. என் அப்பாவை போல அவரை நினைக்கிறேன். ஆனால் சில விஷயங்கள் நம்மை மீறி நடக்கிறது. அவரின் நட்பை இழந்தது பெரிய இழப்பு.” என்று உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement