• May 19 2024

என் குழந்தைகளுடன் லாங் டிரைவ்- புதுவிதமாக ஊரைச் சுற்றக் கிளம்பிய மகத்- யாருடன் போயிருக்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஜில்லா ,மங்காத்தா போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் தான் மகத். இதனைத் தொடர்ந்து இவர் பிக்பாஸ் சீசன் 2 இல் கலந்து கொண்டபோதே ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

மேலும் இவர் மாடல் அழகி ப்ராச்சி என்பவரைத் திருமணம் செய்திருப்பதோடு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் அண்மையில் பிறந்தது. இதனைத் தொடர்ந்து  ‘கெட்டவனு பேரு எடுத்த நல்லவன்டா’ என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் இவருடன் ஐஸ்வர்யா தத்தா, சாக்‌ஷி அகர்வால், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.


இதனை அடுத்து ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ மற்றும் ‘இவன் தான் உத்தமன்’ போன்ற இன்னும் சில படங்களிலும் நடித்திருக்கின்றார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார்.


அந்த வகையில் தற்பொழுது தனது செல்லப்பிராணிகளான கோகோ மற்றும் புளூட்டோவுடன் காரில் பயணம் செய்த புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.அதில் என் குழந்தைகளுடன் லாங் டிரைவ் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement