• May 02 2024

இவர் சொல்லட்டும் சிஸ்பாஃக் வைக்கிறேன்- வெளிப்படையாகப் பேசிய விஜய் சேதுபதி- சூப்பர் அப்டேட்டாக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் தான் டிஎஸ்பி.இப்படத்தில் இவருடன் அனுகீர்த்தி வாஸ், பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்பந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

 கார்த்திகேயன் சந்தானம்இந்த படத்தை தயாரித்துள்ளார்.அத்தோடு டி. இமான் இசையமைத்துள்ளார். பாடல்களை யுகபாரதி, பொன்ராம், விஜய் முத்துப்பாண்டி ஆகியோர் எழுதியுள்ளனர்.


 எடிட்டிங் விவேக் ஹர்ஷன், சண்டை பயிற்சி தினேஷ் சுப்பராயன், ஆகியோர் செய்துள்ளனர். மேலும் இப்படம் நாளை அதாவது டிசம்பர் 2ம் திகதி வெளியாகவுள்ளதால் படத்தின் ப்ரமோஷன் பணியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த போது விஜய் சேதுபதியிடம் எந்த இயக்குநர் சொன்னால் சிஸ்பாஃக் வைப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய விஜய் சேதுபதி இயக்குநர் சொன்னால் அல்ல நன் நடிக்கும் கதைக்கு சிஸ்பாஃக் வேணும் என்றால் வைப்பேன் என கூலாக தெரிவித்துள்ளார்.

இதனால் விஜய் சேதுபதியும் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவார் என ரசிகர்கள் கூறி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement