• May 11 2024

நாய் சேகர் ரிட்டன்ஸ் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடனமாடி அசத்திய வடிவேலு- செம ஹப்பியான ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் வடிவேலு நாயகனாக நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் வரும் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இதனால் இப்படத்தின் ட்ரெய்லர் இன்றைய தினம் வெளியாகியது.ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டை செய்தியாளர்களுடன் இணைந்து நடிகர் வடிவேலு கொண்டாடினார். சென்னையில் உள்ள பிரபல மாலில் செய்தியாளர்கள் முன்னிலையில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. ட்ரெய்லர் வெளியீட்டை விசில் அடித்து, நடனமாடி கொண்டாடினார் வடிவேலு.


அப்போது செய்தியாளர்களையும் தன்னுடன் நடனமாட வைத்து மகிழ்ந்தார். நடிகர் வடிவேலு சில ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் தோன்றுவதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.மேலும் நாய்சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தை இயக்குநர் சுராஜ் இயக்கியுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் வடிவேலு பாடிய இரண்டு பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement