• May 04 2024

லியோ படத்தில் அதிகளவான வன்முறை காட்சிகள் தான் இருக்கின்றது- பிரபல நிறுவனம் வெளியிட்ட முதல் விமர்சனம்

stella / 6 months ago

Advertisement

Listen News!


தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள, 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி மிகவும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.இந்த நிலையில் இப்படத்தின் விமர்சனம் குறித்து அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கூறியுள்ளது.

அதன்படி அதன் சமூக வலைத்தளத்தில் கூறியதாவது, "LEO திரைப்படத்தில், அதிக அளவிலான வன்முறை மற்றும் கொடூரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.  நாங்கள் எதிர்பார்த்ததை விட, 'லியோ' படத்தில் அதிக அளவிலான கிராஃபிக்ஸ் காட்சிகள் உள்ளதை பார்க்க முடிகிறது. LEO படத்தை 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம், என்கிற இலக்கை நாம் கொண்டிருந்தாலும், BBFC அதற்கு 18+ வழங்கியுள்ளது. 


 அதாவது 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே திரையரங்குகளில் இப்படத்தை பார்க்க முடியும் என கூறியது. துரதிர்ஷ்டவசமாக 15-17 வயதுக்குட்பட்ட இளம் ரசிகர்களால் இப்படத்தை பார்க்க முடியாத நிலை இருந்ததாக அஹிம்சா நிறுவனம் தெரிவித்துள்ளது.

BBFC உடனான விவாதங்களுக்குப் பிறகு,  'லியோ' படத்தை 15 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் பார்க்க வேண்டும் என முடிவு செய்து பேச்சு வார்த்தை நடத்தினோம். அதாவது  படத்தின் மையக்கரு, ஓட்டம், தனித்துவமான தருணங்கள் மற்றும் தளபதியின் வெகுஜன ஈர்ப்பு ஆகியவற்றில் எந்த விளைவுகளையும் இப்படம் ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்தோம்.


ஆனால் 4 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் பலர் தளபதி விஜயின் தீவிர ரசிகர்களாக இருந்தாலும், சில கொடூரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் அவர்களால் இப்படத்தை பார்க்க முடியாது.  முக்கிய அதிரடி காட்சிகள் காட்சிகளை முழுவதுமாக அகற்றினால் -  அது திரைப்படத்தின் அசல் பதிப்பை மிகவும் வித்தியாசமாக மாற்றும், அது சரியான தீர்வாகவும் இருக்காது,  இந்த படத்திற்கு தங்கள் குழந்தைகளை கொண்டு வர எதிர்பார்த்த அனைத்து பெற்றோர்களிடமும், நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். 

"LEO" திரைப்படம் 100% லோகேஷ் கனகராஜ் திரைப்படம் - தீவிரமான மற்றும் வன்முறை நிறைந்த படமாக உள்ளது. எனவே 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement