• Jan 19 2025

மறைந்த நடிகர் போண்டாமணி அளித்த இறுதி பேட்டி- அஜித் உதவி செய்யவே இல்லையா.....

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சுமார் 270 படங்களில் துணை காமெடி நடிகராக நடித்து பிரபலமானவர் போண்டா மணி. கிட்னி செயலிழந்த நிலையில், சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தனது மருத்துவ செலவுக்கு உதவுமாறு பல நடிகர்களிடம் அவர் கோரிக்கை வைத்து வந்த நிலையில் ரஜினிகாந்த், தனுஷ், விஜய்சேதுபதி, மயில்சாமி உள்ளிட்ட பலர் அவருக்கு பணம் கொடுத்து உதவினர்.


 சிகிச்சை முடிந்து சரியாகி விடுவார் என குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று பத்திரமாக பார்த்து வந்த நிலையில், நேற்று இரவு திடீரென மயங்கி விழுந்து அவரது உயிர் பிரிந்து விட்டது.இதனால் திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் போண்டா மணி இறுதியாக அளித்த பேட்டி ஒன்று தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியதாவது, மைனர் மாப்பிள்ளை படத்தில் அஜித்தை நடிக்க வைத்ததே நான் தான்  ஆனால், உடல் நலக்குறைவாக இருக்கிறேன். ஏதாவது பண உதவி செய்ய முடியுமா என பல முறை கேட்டும் அஜித் தனக்கு உதவியே செய்யவில்லை என அந்த பேட்டியில் கண்ணீர் மல்க போண்டா மணி பேசியுள்ளார்.

சினிமாவில் பெரிய நடிகராக வந்தவுடன் உங்களுக்கு உதவி செய்யுறேன் மணி என சொன்ன அஜித் குமார் பெரிய ஹீரோவான பின்னர் கூட எந்தவொரு படத்திலும் அவருக்கு வாய்ப்பே தரவில்லையாம். எப்போது கேட்டாலும், அடுத்த படத்தில் பார்க்கிறேன் என்றே தட்டிக் கழித்து வந்தாராம். சிட்டிசன் படத்தில் கூட அஜித் சான்ஸ் வாங்கித் தரவில்லையாம். 


இயக்குநரே போண்டா மணியை அந்த அத்திப்பட்டி போர்ஷனில் நடிக்க வைத்த நிலையில், பரவாயில்லையே எப்படியோ உள்ளே வந்துட்டீங்க, நடிகரை விட இயக்குநரை தான் ஃபாலோ செய்ய வேண்டும் என்று அட்வைஸ் வேறு சொன்னதாக அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார். பசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்பட்ட நிலையில், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் பலமுறை முறையிட்டேன். 

அஜித்திடம் சொல்வதாக வாக்கு கொடுத்தார். ஆனால், கடைசி வரை அஜித் உதவியே செய்யவில்லை என போண்டா மணி கடைசியாக அளித்த பேட்டியில் மனம் நொந்து பேசியிருந்தார்.


Advertisement

Advertisement