• Sep 26 2023

குக்வித்கோமாளி சீசன் 4 ரசிகர்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ்- டைட்டில் வின்னர் இவர் தான்- வெளியாகிய அதிகாரப்பூர்வ தகவல்

stella / 1 month ago

Advertisement

Listen News!

ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பேமஸ் ஆனது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்றைய தினம் நிறைவடைந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் சிவாங்கி, விசித்ரா, கிரண், மைம் கோபி, ஆண்ட்ரியன், ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்கள். இதில் ஆண்ட்ரியன் மட்டும் வைல்டு கார்டு சுற்று மூலம் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

இந்த நிலையில் பைனல் நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகக் காணப்பட்டது. அதற்கிணங்க டைட்டில் வின்னராக மைம் கோபி வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


2ம் இடம் ஸ்ருஷ்டிக்கும், 3ம் இடம் விசித்ராவுக்கும் கிடைத்து இருக்கிறது.இந்த சீசன் முடிவுக்கு வந்து இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் மற்றும் பிரபலங்கள் எமோஷ்னலாக தான் ஷோவை முடித்து இருக்கின்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் எனப் பலரும் தமது வாழ்த்தினைத் தெரிவித்து வருகின்றனர். அத்தோடு எப்போது ஐந்தாவது சீசன் ஆரம்பமாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement

Advertisement