• Sep 26 2023

கொஞ்சம் ராவாத்தான் இருக்கு- வெளிநாட்டில் ஜாலியாக ஊர் சுற்றும் சமந்தாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார் சமந்தா.கடின உழைப்பாலும், அசாத்திய நடிப்பாலும் மிக குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தவர்.


தென்னிந்திய மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ள சமந்தா எதிர்பாராதவிதமாக மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார்.இதனால் சில காலம் ஓய்விலும் சிகிச்சையிலும் இருந்த சமந்தா, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியிருக்கிறார்.


விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா, மயோசிடிஸ் நோய் சிகிச்சைக்காக ஓராண்டு காலம் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளாராம் சமந்தா.


இதற்கு முன்னதாக தனது தோழியுடன் பாலி தீவுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தார்.இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் வெளிநாட்டில் ஜாலியாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement