• Sep 25 2023

பிரபல ரியாலிட்ரி ஷோவில் குழந்தைகளிடம் தவறான கேள்வி கேட்ட ஷில்பா ஷெட்டி-கடும் கோபத்தில் ரசிகர்கள்

stella / 1 month ago

Advertisement

Listen News!


பிரபல ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில், பிரபுதேவாவுடன் 'மிஸ்டர் ரோமியோ' படத்தில் நடித்துள்ளார். விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இவர் தற்போது 'இந்தியன் போலீஸ் போர்ஸ்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.

சோனி தொலைக்காட்சி சேனலில் 'சூப்பர் டான்சர்' என்ற பெயரில் குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதன் 3வது சீசன் தற்போது ஒளிப்பாகிறது. இந்த இந்த நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டி, கீதா கபூர் மற்றும் அனுராக் பாசு ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.


அந்த வகையில் சமீபத்தில் ஒளிபரப்பாகிய எப்பிஷோட் ஒன்றில் மைனர் சிறுவனிடம் மேடையில் ஆபாசமான வகையில் கேள்விகள் கேட்கப்பட்டதாக சர்ச்சை எழுந்து இருக்கிறது.


குழந்தைகளிடம் தகாத கேள்விகள் கேட்டதை ஒளிபரப்பிய சோனி Entertainment Televisionக்கு தற்போது குழந்தைகள் ஆணையம் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது.மேலும் அந்த ஷோ எபிசோட்டை அனைத்து இடங்களில் இருந்து நீக்கவும் ஆணையம் கூறி இருக்கிறது. அந்த வீடியோ ட்விட்டரில் அதிகம் வைரல் ஆன நிலையில் தற்போது இவ்வளவு பெரிய சர்ச்சையில் ஷில்பா ஷெட்டி மாட்டி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement