• Mar 23 2023

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த குக்வித் கோமாளி பவித்ரா.. பகீர் தகவலை கூறிய நடிகை..!

Prema / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியைப் பொறுத்தவரையில் அதில் ஒளிபரப்பாகும் சாதாரண மக்களையும் பிரபலங்களாக மாற்றக் கூடிய வல்லமை உண்டு. அந்தவகையில் 'குக்வித் கோமாளி' நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவரே பவித்ரா லட்சுமி.


இந்நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகின்றார். அந்தவகையில் 'நாய் சேகர்' என்ற படத்தின் மூலம்  கதாநாயகியாக அறிமுகமானார். அறிமுகப் படத்தில் அவருக்கு கிடைத்த அமோக வரவேற்பின் மூலம் மேலும் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் பல விடயங்களை பகிர்ந்துள்ளார் பவித்ரா லட்சுமி. அதாவது சிறு வயதில் தான் சினிமாவிற்கு செல்வது தன் அம்மாவிற்கு பிடிக்கவில்லை என்றும், எதிர்பாராமல் ஒரு விபத்து நடந்ததைப்பற்றியும் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.


அந்தவகையில் அவர் கூறுகையில் "என் அம்மாவிற்கு சிறுவயதில் சினிமாவில் நடிக்கப்போறேன் என்று சொன்னதும் அவர் அதிர்ச்சியடைந்தார். ஒழுங்கா படித்து முடித்து நல்ல வேலைக்கு போ என எனக்கு சொன்னார்கள். நானும் என் அம்மா படும் கஷ்டத்தை பார்த்து படிக்க சம்மதித்தேன்" என்றார்.


மேலும் "அதன் பிறகு ஒரு நாள் சென்னையில் வந்த போது எதிர்பாராமல் ஒரு விபத்தில் சிக்கினேன்.அந்த விபத்தில் படுகாயமடைந்த என் முகத்தை பார்க்க எனக்கே பிடிக்கவில்லை. ஆனாலும் இதை என் அம்மாவிடம் கூறினால் வருத்தப்படுவார் என நான் கடைசிவரைக்கும் எனக்கு விபத்து நடந்தது சொல்லவேயில்லை" எனவும் மிகவும் உருக்கமாக பேசினார் பவித்ரா லட்சுமி

Advertisement

Advertisement

Advertisement