• Apr 07 2025

சினிமாவில் என்றி கொடுக்கும் குஷ்புவின் மூத்தவாரிசு..! தாயைப் போல ஜொலிக்கப்போறார் போலயே..!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை குஷ்பு, தனது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தைப் பிடித்திருந்தவர். இப்பொழுது அந்த குஷ்புவின் குடும்பத்தில் இருந்து மீண்டும் ஒரு புதிய நட்சத்திரம் களமிறங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா, தற்பொழுது சினிமா துறையில் தனது பயணத்தை தொடங்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, அவர் சிறு கதாப்பாத்திரங்களில் அல்ல நேரடியாக ஹீரோயினாகவே அறிமுகமாக உள்ளார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

தற்பொழுது அவந்திகாவிற்கான படவாய்ப்புக்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று சிலர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஹீரோயினாக அறிமுகமாகும் முன், அவந்திகா செய்துள்ள போட்டோஷூட் ரசிகர்களின் கண்களைப் பறிக்கும் வகையில் இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


சமீபத்தில் அவந்திகாவின் சில போட்டோஷூட் படங்கள் இணையத்தில் வெளியாகியதோடு அவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளன. மேலும் அவந்திகாவின் இப்புகைப்படங்களில் குஷ்புவின் முக அடையாளங்களையும் காணமுடிகின்றது.

குஷ்பு தனது நடிப்பால் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர். இப்பொழுது அவரது மகள் அவந்திகா, ஹீரோயினாக அறிமுகமாகும் தகவல் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. தனது தாயைப் போல, அவந்திகா தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி வெற்றிப் பாதையில் பயணிப்பாரா என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பிவருகின்றனர்.


Advertisement

Advertisement