• Sep 17 2024

குஷ்பூவின் Tattoo ரகசியம்- அதில் ஜந்து பேர் இருக்கிறாங்களா..? அவரே கூறிய விசயம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

90களில் பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் குஷ்பு. இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில நடித்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்து 90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் வலம் வந்தவர்.

வெள்ளி திரையை தொடர்ந்து சின்ன திரையிலும் மின்னிய குஷ்பூ, தற்போது பாஜகவில் இணைந்து முழு நேர அரசியல் வாதியாக செயல்பட்டு வருகிறார்.

நடிகை குஷ்பு அரசியலில் இறங்கியதில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் ஆகியக் கட்சிகளில் சில காலம் இருந்துவிட்டு தேர்தல் சமயத்தில் பாஜகவில் ஐக்கியம் ஆனார்.

மேலும் எந்த கட்சியிலும் கடுமையாக உழைக்காமல் பதவிக்காக கட்சி மாறிக்கொண்டே இருப்பதுதான் குஷ்புவின் வழக்கம் என்று கேலிகளும் மீம்ஸ்களும் பரவின. பாஜகவில் அவருக்கு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் படுதோல்வியை சந்தித்தார்.

அத்தோடு தோல்வியால் துவண்டிருந்த அவர் பாஜகவில் ஏதேனும் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என ஆசையில் இருந்துள்ளார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் சின்னத்திரையில் மெஹா தொடர் ஒன்றில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் அவர் தனது Tattoo ரகசியம் பற்றி ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.அதாவது தனது கையில் MASSH என Tattoo போட்டுள்ளார்.அந்த Tattooவில் தனது நெருங்கிய தோழிகளின் பெயரே அது என கூறியுள்ளார்.

M-மோல்-மோலி பிரிந்தா மாஸ்டர்A-அனு
S-சுப்பு
S-சுஜாதா
H-சுகாசினி என கூறியுள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் தோழிகளில் அவ்வளவு அன்பா என கேட்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement