• May 05 2024

'Super Singer' ஷோவிற்கு சிறப்பு விருந்தினராக வந்த குஷ்பூ... வெளியானது சூப்பரான ப்ரோமோ ..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோ பலரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது என்றுதான் கூறவேனும். ஏனெனில் திரைத்துறையில் பின்னணி பாடகர்களாக இருக்கும் பலருக்கும் அடித்தளமிட்டுக் கொடுத்தது இந்த சூப்பர் சிங்கர் மேடை தான்.


எப்போதுமே மக்களின் விருப்பமான நிகழ்ச்சியாக இருந்து வருகிற இந்த ஷோ ஜூனியர், சீனியர் என மாறி மாறி இடம்பெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் தற்போது ஜூனியர்களுக்கான 9-ஆவது சீசன் இடம்பெற்று வருகின்றது. 


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் 'Celebrating SPB' ரவுண்ட் இடம்பெறுகின்றது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பாடகர் பாலசுப்பிரமணியம் அவர்களின் பாடல்களை தேர்வு செய்து மிகவும் அழகாகப் பாடுகின்றனர். 


அத்தோடு இந்த ரவுண்டிற்கு சிறப்பு விருந்தினராக நடிகை குஷ்பூ அழைக்கப்பட்டிருக்கின்றார். மாகாபா மற்றும் பிரியங்கா பூங்கொத்து கொடுத்து அவர்களை வரவேற்கின்றனர். இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..! 


Advertisement

Advertisement

Advertisement