• May 18 2024

நடிகர் பிரபுதேவா- இலங்கைப் பிரதமர் திடீர் சந்திப்பு... பின்னணி என்ன..? வைரலாகும் புகைப்படம்..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் பிரபல நடன இயக்குநரும், திரைப்பட நடிகருமாக திகழ்ந்து வருகின்ற பிரபுதேவா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அதாவது அவர் நடிக்கும் 'முசாசி' என்ற புதிய திரைப்படத்தின் பாடல் காட்சியொன்றை பதிவு செய்வதற்காக வந்துள்ளார்.


அந்தவகையில் அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கும் இப்படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து ஜான் விஜய், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், ‘மாஸ்டர்’ மகேந்திரன், தங்கதுரை, மகேஷ், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.


இந்நிலையில் 'முசாசி' படக்குழுவினரைக் கௌரவப்படுத்தும் நோக்கில் இலங்கைப் பிரதமரான தினேஷ் குணவர்தன அவர்களுக்கு அழைப்பு ஒன்றினை விடுத்துள்ளார். அவரின் அழைப்பிற்கு மரியாதை கொடுத்த படக்குழுவினர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் பெற்றனர். பிரதமர் தினேஷ் குணவர்தனவை பிரபுதேவா சந்தித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement