• May 05 2024

சீரியல் நடிகருடன் நெருக்கமாக இருக்கும் கீர்த்தி சுரேஷ்... ஆஹா அது இவர் தானா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாத் திரையுலகம் கொண்டாடும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரின் நடிப்பினையும் தாண்டி இவரின் அழகிற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 


குறிப்பாக 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013-ஆம் ஆண்டில் 'கீதாஞ்சலி' எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து வருகின்ற இவர் நடிப்பில் தற்போது 'மாமன்னன்' மற்றும் 'தசரா 'ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.


இவர் நேற்றைய தினம் தன்னுடைய பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடி இருக்கின்றார். இதற்கு திரையுலகில் உள்ள பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களினைத் தெரிவித்து இருந்தனர். அதுமட்டுமல்லாது அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவுகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.


அதேபோன்று வெள்ளித் திரைப்பிரபலங்கள் மட்டுமல்லாது சின்னத்திரை பிரபலங்களும் கீர்த்தி சுரேஷுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் குமரனும் நடிகை கீர்த்தி சுரேஷின் பக்கத்தில் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து பிறந்தநாள் வாழ்த்தை கூறியுள்ளார். அப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரியளவில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement