• May 05 2024

என்ன சிம்ரன் இப்படி இறங்கிட்டீங்க- கீர்த்தியின் புகைப்படத்திற்கு அடித்து பிடித்து கெமண்களை அள்ளிக்குவிக்கும் பிரபலங்கள்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் டாப் நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஸ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி வருகின்றார். 


2000 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2013-ஆம் ஆண்டில் 'கீதாஞ்சலி' எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாகத் கதாநாயகியாக அறிமுகமானார். எனினும் தமிழ் சினிமாவில் இவருக்கான அறிமுகத்தை கொடுத்தது விக்ரம் பிரபு நடித்த 'இது என்ன மாயம்' என்னும் திரைப்படமே. இப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்


இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் 'பைலட்ஸ், அச்சனே எனக்கு இஷ்டம், இது என்ன மாயம், ரஜினி முருகன், தானா சேர்ந்த கூட்டம்' போன்ற பல படங்களும் வெளியாகி இருக்கின்றன. இது தவிர இன்னும் பல படங்களில் படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகிய 'பைரவா' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்ற ஒரு படமாகும். இவற்றை தொடர்ந்து இவர் தற்போது தெலுங்கு படங்களிலேயே அதிகளவு கவனம் செலுத்தி வருகின்றார்.


இவ்வாறாக தனது தனித்துவமான நடிப்பினாலும், அழகினாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்த நடிகை கீர்த்தி சுரேஸ் பல விருதுகளையும் வென்றெடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக சிறந்த அறிமுக நடிகைக்கான ஏசியாநெட் விருது, சிறந்த அறிமுக நடிகைக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, சிறந்த அறிமுக நடிகைக்கான நானா திரைப்பட விருது போன்ற விருதுகளைக் குறிப்பிடலாம்.


இவ்வாறாக நடிப்பில் சிறந்து விளங்குகின்ற இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர். அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வார். அப்புகைப்படங்களிற்கு அவரது ரசிகர்கள் தமது லைக்ஸ்களையும், கெமெண்டுகளையும் தெறிக்க விட்டு வருவார்கள்.


இந்நிலையில் பச்சை உடையில் வித்தியாசமாக போட்டோசூட் ஒன்றை நடத்தி உள்ளார்.அதாவது உள்ளாடை அணியாமல் வெறும் கோட்டுடன் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார். என்ன சிம்ரம் இப்படி இறங்கிட்டீங்க என்று புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கெமண்ட் செய்து வருகிறார்கள்.இந்நிலையில் இப் புகைப்படத்தை பார்த்த குஷ்பு ,மாளவிகா மோகனன், கல்யாணி பிரியதர்ஷன் என பல முன்னணி நடிகைகள் அதற்கு கெமண்ட் போட்டு வருகின்றனர்.அத்தோடு அந்த புகைப்படம் ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.




Advertisement

Advertisement

Advertisement