• May 18 2024

விஜய் வைத்த பார்ட்டியில் உதயநிதி ஸ்டாலின்- கையில் மது பாட்டிலுடன் பிரம்மாண்ட இயக்குநர்-தீயாய் பரவும் புகைப்படம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் இயக்குநரின் நடிகராக தமிழில் அறிமுகமாகியிருந்தாலும் தன்னுடைய அயராத முயற்சியினால் தான் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

இவரைப் பற்றிய சர்ச்சைகள் அடிக்கடி வெளியாகினாலும் அதனை எல்லாம் பொருட்படுத்தாது தனது கெரியரில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றார்.இவர் தற்போது நடிக்கும் திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கி வரும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பாக்கி. இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான அப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.

அத்தோடு அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மறுபக்கம் பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கிறார் தளபதி விஜய். துப்பாக்கி பட வெற்றியை கொண்டாடும் விதமாக பிரபலங்களை அழைத்து கொண்டாடியுள்ளார் விஜய்.

அதன்படி அந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் விஜய்யுடன் விக்ரம், முருகதாஸ், உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குநர் ஷங்கர் கையில் மதுபானத்துடன் உள்ளார்.

இவ்வாறு இருக்கையில் திடீரென அந்த புகைப்படம் இணையத்தில் உலாவி வருகின்றது.இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்




Advertisement

Advertisement