• May 18 2024

நடிகையுடன் ரகசியமாக வாழ்ந்து வந்த கவுண்டமணி-பல நாட்களுக்கு பின் உண்மையை உடைத்த பிரபலம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!


1977ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கமல்ஹாசன்,மற்றும் ரஜினிகாந்த் நடித்த 16 வயதினிலே படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் கவுண்டமணி. இதனைத் தொடர்ந்து கரகாட்டக்காரன், வைதேகி காத்திருந்தால், கன்னி ராசி, நடிகன், மன்னன், சூரியன், ஜென்டில்மேன், மன்மதன் என ஏகப்பட்ட படங்களில் நகைச்சுவையில் கலக்கி வந்தவர்.

மேலும் 80 மற்றும் 90களில் கவுண்டமணி - செந்தில் காம்பினேஷன் இல்லாத படங்களே இல்லை எனலாம்.கடைசியாக 49 ஓ, எனக்கு வாய்த்த அடிமைகள் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.



தமிழ் திரையுகில் இருந்து அழிக்க முடியாத நகைச்சுவையை செய்து நம்மை தினம்தோறும் சிரிக்க வைத்துக்கொண்டு இருப்பவர் நடிகர் கவுண்டமணி. இவர் 80 மற்றும் 90களில் பிரபல்யமான முக்கிய நடிகராகவும் வலம் வந்தார்.

இவ்வாறு இருக்கையில் சினிமா நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியங்களை வெளியிட்டு வரும் பயில்வான் தற்போது கவுண்டமணியின் உண்மை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

சினிமா நடிகர்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது சாதாரண விடயமாக தெரியும் நிலையில், நிஜ வாழ்க்கையில் என்ன செய்கின்றனர் என்பது பலருக்கும் தெரியாமலே போய்விடுகின்றது.

இந்நிலையில் ரங்கநாதன் யூடியூப் சேனலில் பேசுகையில், கவுண்டமணிக்கும் பிரபல நடிகை ஒருவருக்கும் ரகசிய உறவு இருப்பதாகவும், நடிகர் கவுண்டமணி பிரபல நடிகைக்கு பல உதவிகளை செய்து தனது குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல் சொந்தமாக ஒரு வீடு கூட வாங்கி கொடுத்துள்ளார்.



அத்தோடு  அந்த வீட்டில் தங்க வைத்து அடிக்கடி சென்று வந்துள்ளதாகவும், நடிகையின் பெயரைக் கூறினால் சங்கடமாக இருக்கும் என்றும் கூறி பெயரை கூறாமல் மறுத்துள்ளாராம்.



Advertisement

Advertisement