• May 09 2024

நானே எதிர்த்து நின்றாலும் என் கனவுகள் வீழாது... மாஸ் டயலாக்குடன் வெளிவந்த கவினின் 'ஸ்டார்' பட ப்ரோமோ டீசர் வீடியோ..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

'சரவணன் மீனாட்சி' சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் கவின். சீரியல்களில் நடித்து வந்த கவின் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாகவும் அறிமுகமானார்.


இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்காவிட்டாலும் லிப்ட், டாடா படத்தின் மூலம் மென்மேலும் பிரபலமானார். அதுமட்டுமல்லாது கவின் 2019-ஆம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கவின் பங்கேற்றிருந்தார்.

இவ்வாறாக சின்னத்திரை, வெள்ளித்திரை எனக் கலக்கி வரும் கவின் தற்போது இளன் இயக்கத்தில் 'ஸ்டார்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரைஸ் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என இரு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். 


இந்நிலையில் தற்போது இப்படத்தின் உடைய சிறப்பு ப்ரோமோ டீசர் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement