• Sep 26 2023

அனல் பறக்கும் அடுத்த அப்டேட்... வெளியாகிறது 'Biggboss-7' Promo Video... அதுவும் எப்போ தெரியுமா..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருவதுண்டு. அந்த வகையில் விஜய் டிவியில் ஏரதளமான ரசிகர்களைக் கவர்ந்த ரியாலிட்ரி ஷோவாக ஒளிபரப்பாவது தான் பிக்பாஸ். 


இந்த நிகழ்ச்சியானது 6சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 7-ஆவது சீசன் ஆரம்பமாக இருக்கின்றது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு கமல் நடித்த ப்ரோமோ வெளியாகி உச்ச கட்ட சந்தோஷத்தைக் கொடுத்திருந்தது.

இதனையடுத்து பிக்பாஸில் ஒரு வீடு அல்ல, இந்த முறை இரண்டு வீடுகள் எனவும், பிக்பாஸும் இரண்டு தான் எனவும் ஒரு தகவல் வெளிவந்தது. அதிலும் குறிப்பாக ஒருவர் பெண் பிக்பாஸ் எனவும் கூறப்படுகின்றது. அவர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் பலரும் ஆவலுடன் உள்ளனர்.


இந்நிலையில் தற்போது மற்றோர் தகவல் வெளியாகி தீயாகப் பரவி வருகின்றது. அதாவது பிக்பாஸின் அடுத்த ப்ரோமோ நாளை வெளியாகும் எனக் கூறப்படுகின்றது. இது பெரும்பாலும் 'Biggboss-7' Launch இற்கான தேதி அறிவிப்பு Promo Video வாக இருக்கலாம் எனப் பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Advertisement

Advertisement

Advertisement