சரவணன் அரசியைப் பார்த்து எதுக்காக கேஸை வாப்பர்ஸ் வாங்கின என்று பேசுறார். மேலும் கதிரும் நீ இப்புடி எல்லாம் சொன்னால் உனக்கு என்ன தியாகி பட்டமா கொடுக்கப் போறாங்க என்று கேட்கிறார். அதைக் கேட்ட பாண்டியன் அரசி மேல கோபத்தைக் காட்டாதீங்க என்று சொல்லுறார். இதனை அடுத்து சக்திவேல் கிட்ட வக்கில் இந்த டுவிஸ்டை எதிர்பார்க்கல என்று சொல்லுறார்.
பின் குமார் அரசி கிட்ட வந்து காலில விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அதைப் பார்த்து எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். பின் சக்திவேல் குமாரைப் பார்த்து மானம் போகுது ஒழும்பு என்று சொல்லுறார். அதனைத் தொடர்ந்து குமார் அரசி கிட்ட அழுது புலம்புறார். அதைப் பார்த்த சக்திவேல் அரசி காலில விழுந்ததுக்கு பதிலா நீ ஜெயிலிலயே இருந்திருக்கலாம் என்கிறார்.
பின் குமார் வீட்ட வந்து நிக்கிறதைப் பார்த்து எல்லாரும் சந்தோசப்படுகிறார்கள். அதனை அடுத்து சக்திவேல் வீட்ட எல்லாருக்கும் குமார் காலில விழுந்த விஷயத்தை சொல்லுறார். வீட்ட வந்த கதிர் கோமதியைப் பார்த்து பேசிக்கொண்டிருக்கிறார். பின் குமாரோட பாட்டி கோமதி வீட்ட வந்து அரசி கிட்ட ரொம்ப நன்றி என்கிறார்.
மேலும் பாண்டியன் கிட்ட வந்து எனக்கு நிம்மதி கொடுத்ததுக்கு தாங்க்ஸ் என்று சொல்லுறார். அதைக் கேட்ட பாண்டியன் உங்களுக்கு நிம்மதி நான் கொடுக்கல அரசி தான் கொடுத்தா என்கிறார். அதைக் கேட்டு பாட்டி அழுது கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!