• May 29 2023

சுந்தரியின் காலில் விழுந்து என்னைக் காப்பாற்று எனக் கதறிய கார்த்திக்- இனி நடக்கப் போவது என்ன?- பரபரப்பான திருப்பங்களுடன் சுந்தரி சீரியல்

stella / 1 month ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கனவுகளை அடைய எப்பிடியெல்லாம் முயற்சிக்கின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

அதிலும் கணவன் கார்த்தி அனு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதோடு சுந்தரியை ஏமாற்றி விட்டார் என்ற விடயம் கொஞ்சம் கொஞ்சமாக சுந்தரி குடும்பத்திற்கு தெரிய வந்து விட்டது. இருப்பினும் சுந்தரியின் மாமாவுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க சுந்தரியின் அம்மா எதனால் பேசாமல் இருக்கிறார் என கேட்க சுந்தரி தன்னால் கர்ப்பமாக முடியாது என்ற விஷயம் தெரிந்ததால் தான் அம்மாவுக்க பேச்சு இல்லாமல் போனது என்ற விஷயத்தையும் சுந்திர மாமாவிடம் சொல்லி விட்டார். மேலும் அனுவின் வளைகாப்பையும் சிறப்பாக பண்ண முருகன் முடிவெடுத்து விட்டார்.

இப்படியான நிலையில் அனுவுக்கும் முருகனுக்கும் உண்மை தெரிந்து விடுமோ என்ற பயத்தில் சுந்தரி காலில் விழுந்து கார்த்திக் கெஞ்சுகின்றார். ஆனால் சுந்தரி உன்னை காப்பாற்று என்று உன் ஆசைப் பொண்டாட்டியோ இல்ல உன் மாமா கிட்டையோ கேள் என்று கூறிவிட்டு செல்கின்றார். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதை வரும் எப்பிஷோட்டுகளில் தான் அறிய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement