• May 06 2024

உயர்ந்த மாடிக் கட்டடத்தில் உயிரைப் பணயம் வைத்து நடித்த கமல்ஹாசன்- வைரலாகும் பரபரப்பான வீடியோ

stella / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமைக் கொண்டவராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இவர் தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்துவருகிறார்.இவர் தற்பொழுது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தான் நிறைவடைந்தது.


இதனை அடுத்து பிரபாஸ் நடிக்கும் புரொஜக்ட் கே’ என்ற திரைப்படத்தில் வில்லன் ஆக நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.இவர் 70, 80ஸ் காலகட்டத்தில் ரொமாண்டிக் ஹீரோவாக பல படங்களில் நடித்திருக்கின்றார்.

கடந்த 1982 -ம் ஆண்டு வெளியான Afsana Do Dilon Ka என்ற பாலிவுட் படத்தில் கமல் ஹாசன் உயிரை பணயம் வைத்து ஸ்டண்ட் காட்சியில் நடித்திருக்கின்றனர். தற்பொழுது இந்த வீடியோ ரசிகர்களால் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement

Advertisement