• Dec 01 2022

கவர்ச்சியான கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காஜல் அகர்வால்?

Listen News!
lathushan / 2 weeks ago
image
Listen News!

காஜல் அகர்வால் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார்.


மேலும் இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. மேலும் இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. 


மேலும் பெருபெட்டு, பிசினசு மேன், ஜில்லா போன்ற திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார்.


மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்கள் நடித்துள்ளார். இவர் தற்போது தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.


இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் கெளதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்க்கு பிறகு ஆச்சார்யா, இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளியாகவுள்ளது. 


தற்போது ஒரு ஸ்பெஷல் பாடலுக்காக 'புஷ்பா 2' குழு காஜலுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அதிகாரப்பூர்வமாக இல்லை என்றாலும், அவரது ரசிகர்கள் இந்த செய்தியால் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


சமீபத்தில் ஒரு இயக்குனர் பெண்ணை மையப்படுத்திய கதையுடன் காஜலை அணுகியுள்ளார். ஆனால் அவர் தான் ஒரு கவர்ச்சியான கதாபாத்திரத்தை விரும்புவதாகக் கூறி அந்த கதையை மறுத்தார். ஆகையால் புஷ்பா படத்தில் நடனமாட படக்குழு அவரை அணுகினால், காஜல் கிரீன் சிக்னல் தருவார் என்கிறது நெருங்கிய வட்டாரம்.