• May 09 2024

"செருப்பு கழட்டி அடிப்பேன், வெளிய போடா"... ஜெயம் ரவியை பார்த்துக் கூறிய தந்தை... நடந்தது என்ன..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பலரது மனங்களையும் கவர்ந்த ஒரு நடிகர் என்றால் அது நம்ம ஜெயம் ரவி தான். இவர் ஒரு வெற்றிகரமான நடிகராக வருவதற்கு அவரது தந்தையும் அண்ணனும் தான் முக்கிய காரணம் என்றே சொல்லலாம்.

ஏனெனில் ஆரம்ப காலகட்டத்தில் தெலுங்கில் வெற்றி பெற்ற திரைப்படங்களின் உரிமைகளை வாங்கி தமிழிலும் அப்படங்களை வெற்றிப் படங்கள் ஆக்கி இருந்தனர். 

அந்த வகையில் ஜெயம் ரவியின் சினிமா பயணத்தில் மறக்க முடியாத ஒரு திரைப்படம் 'சந்தோஷ் சுப்பிரமணியம்'.


இப்படமானது சித்தார்த், பிரகாஷ்ராஜ், ஜெனிலியா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த பொம்மரில்லு என்கிற பெயரில் உருவான தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். மேலும் பொம்மரில்லு திரைப்படத்தின் இயக்குநர் பாஸ்கர் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தப் படத்தில் இருந்த அனைத்து காட்சிகளுமே மக்களால் ரசிக்கப்பட்டவை. அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் ஜெயம் ரவி சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.

மேலும் படப்பிடிப்பின் போது அவர் பேசிய அந்த நான்கு நிமிட காட்சியானது ஒரே சாட்டில் எடுக்கப்பட்டதாம். அக்காட்சியை முழுதாக நடித்த பின்னர் இயக்குநர் கட் சொல்லியும் சுற்றி இருந்தவர்கள் யாரிடமும் எந்தவிதமான ரியாக்க்ஷனும் இல்லையாம். 

இதனைப் பார்த்த ஜெயம் ரவி ஒருவேளை நடிப்பில் சொதப்பிவிட்டோமோ என்று நினைத்தபோது அங்கிருந்த லைட் மேன்கள் கண்கலங்கி நின்றார்களாம். அதுமட்டுமல்லாது உடனே பிரகாஷ் ராஜ் ஓடிவந்து இவரை கட்டிப்பிடித்து பாராட்டியதாக ஜெயம் ரவி கூறி இருக்கிறார்.


இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் அந்தப் படத்தை ரவியின் அப்பா மோகன் எடிட் செய்த போது மற்ற நடிகர்களின் ரியாக்க்ஷன் சாட்டை வைக்காமல் ஜெயம் ரவி நடித்த அந்த ஒரு சாட்டை மட்டும் தொடர்ச்சியாக நான்கு நிமிடங்கள் வைத்தாராம்.

அதனை பார்த்த ரவி "நீங்கள் எடிட்டராக வேலை செய்யாமல் ஒரு அப்பாவாக வேலை செய்து விட்டீர்கள்" என்று கூற, அதற்கு அவரின் தந்தை "செருப்பு கழட்டி அடிப்பேன்" என்று கோபத்தில் கூறினாராம். 

அப்போது ஆக்டிங்கை விட ரியாக்ட் செய்வது முக்கியம் என்று நீங்கள் தான் எனக்கு கற்றுக் கொடுத்தீர்கள் என்று கூறிய போது ஜெயம் ரவியை "வெளியே போடா' என்று துரத்தி விட்டாராம் அவரின் தந்தை. அதன் பின்னர் ரவி கூறியது போல மற்ற நடிகர்களின் ரியாக்க்ஷன்களையும் வைத்து எடிட் செய்து பின்னர் போட்டுக் காட்டினாராம். 


அதுமட்டுமல்லாது அதைத்தான் நாம் படத்தில் பார்த்து உள்ளோம் என்று ஜெயம் ரவி கூறியிருக்கிறார்.

மேலும் அப்பா மகன் மீது வைத்திருக்கும் பாசமும் மகன் அப்பா மீது வைத்திருக்கும் பாசமும் எந்த அளவுக்கும் மாறவே இல்லை எனவும், ஆனால் வேலை என்று வந்து விட்டால் ஆரோக்கியமான விவாதங்கள் எப்போதும் எமக்குள் தொடரத்தான் செய்கிறது எனவும் ஜெயம் ரவி கூறியுள்ளதாக தகவல் கசிந்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement