இயக்குநர் ஜேசன் சஞ்சய் தனது கல்லூரி கால காதல் அனுபவம் குறித்து பகிர்ந்துள்ள தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ஜேசன் சஞ்சய், நடிகர் விஜய்யின் மகன் என்பதால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா பயணம் குறித்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் கூடுதல் கவனத்தைப் பெறுகின்றன. அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கல்லூரி கால காதல் குறித்து அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது தான் ஒருவரை காதலித்ததாக ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். சுமார் ஒன்றரை வருடங்கள் அந்த காதல் உறவில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், சில காரணங்களால் இருவரும் சுமூகமாகப் பேசி அந்த உறவில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார். காதல் பிரிவுக்குப் பிறகு அந்த காலகட்டத்தில் யுவன் சங்கர் ராஜாவின் காதல் பாடல்களை அதிகம் கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அந்த அனுபவத்திற்குப் பிறகு வாழ்க்கையை அதன் போக்கில் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்ததாகவும் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
தனது காதல் அனுபவத்தை அவர் வெளிப்படையாக பகிர்ந்துள்ள இந்த பேட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, யுவனின் பாடல்களுடன் தனது காதல் நினைவுகளை அவர் தொடர்புபடுத்தி பேசியிருப்பது ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது.
Listen News!