நடிகை கயாடு லோஹர் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சென்சேஷன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தனது அழகான தோற்றம், இயல்பான நடிப்பு மற்றும் ஸ்டைலிஷான லுக்கால் ரசிகர்களை கவர்ந்து வரும் இவர், குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார்.
சமீபகாலமாக கயாடு லோஹர் நடிக்கும் திரைப்படங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், அவருடைய சமூக வலைத்தளப் பதிவுகளும் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகின்றன.
அந்த வகையில், தற்போது அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ட்ரெண்டியான உடையில் மிகவும் ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ள கயாடு லோஹரின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.
விதவிதமான போஸ்களில் அவர் வெளியிட்டுள்ள இந்த ஸ்டில்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
Listen News!