• Feb 14 2026

‘ஜனநாயகன்’ பட சென்சார் வழக்கு வாபஸ் – ரிலீஸுக்கு பச்சைக்கொடியா.?

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

இளைய தளபதி விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் தான் ‘ஜனநாயகன்’. இந்த படம் அரசியல் கதைக்களம் கொண்டுள்ளதோடு, அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. 

பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம், சென்சார் தொடர்பான பிரச்சினைகளால் ரிலீஸ் தேதி தள்ளிப் போயிருந்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றமும், குழப்பமும் ஏற்பட்டது.

இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ படத்திற்கு எதிராக தொடரப்பட்ட சென்சார் வழக்கு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் படத்தின் வெளியீட்டிற்கு இருந்த முக்கிய தடையாக கருதப்பட்ட சட்ட சிக்கல் நீங்கியுள்ளது. சென்சார் குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை மற்றும் தேவையான விளக்கங்கள் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வழக்கு வாபஸ் பெறப்பட்ட செய்தி வெளியானதையடுத்து, சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #Jananayagan என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதன் மூலம், படத்தின் ரிலீஸ் பாதை இனி சீராக இருக்கும் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

Advertisement