• May 19 2024

திடீரென ரத்து செய்யப்பட்ட ஜெயிலர் திரைப்படம்- கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்- இது தான் காரணமா?

stella / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜினிகாந்த்தின் 169 திரைப்படமான ஜெயிலர் இன்று ரிலீஸ் ஆனது. மதுரையில் 28 தியேட்டர்களில் ஜெயிலர் திரைப்படம் இன்று காலை 8.30 மணிக்கு முதல் காட்சியுடன் தொடங்கியது.இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடினார்கள்.மேலும் ஜெயிலர படத்தைப் பார்த்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அத்தோடு படம் முதல் நாளில் 100 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


மேலும் ஜெயிலர்' திரைப்படம் பார்த்த விஜய் ரசிகர் ஒருவர் படம் நன்றாக இல்லை என்றும் 'சூப்பர் ஸ்டார் விஜய் வாழ்க' என்றும் கூறியதால் கடுப்பான ரஜினி ரசிகர்கள் அவரை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படியான நிலையில்  UK-வில் படக்காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டு இருக்கிறது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.ஜெயிலர் படத்தை முதல் நாள் பார்க்க வேண்டும் என ஆர்வத்துடன் வந்த ரசிகர்கள் படம் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் பாதியிலேயே ஷோ நிறுத்தப்பட்டுவிட்டது.


சென்சார் பிரச்சனை என்றும், அதனால் தான் UK நாடு முழுக்க காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.இதனால் ரஜினி ரசிகர்கள் கடும் சோகத்தில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement