• Sep 30 2023

'பயங்கரமா.. செஞ்சிட்டாரு'.... ஜெயிலர் படம் பற்றிய ரசிகர்கள் விமர்சனம் இதோ!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் இன்று பிரமாண்டமாக வெளியானது. 

இப்படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார்,தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில் எனப் பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இன்று படம் வெளியாகி முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில் தமிழகத்தில் 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. தமிழகத்தில் முதல் காட்சி முடிவடைந்து தற்போது படம் பார்த்தவர்கள் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அலப்பறையை கிளப்பிய ரசிகர்கள்: ஒருபக்கம் பாஸிட்டிவ் விமர்சனம் வருவதால் படக்குழுவும், ரஜினி ரசிகர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். அதேபோல் மறுபக்கம் ரசிகர்கள் அலப்பறையை கிளப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் ஜெயிலர் படத்திற்கு என்ன விமர்சனம் கொடுத்திருக்கிறர்கள் என்று பார்ப்போம்.


'' செமயா செஞ்சிட்டாரூ,ரம்யா கிஷ்ணன், மோகன்லால்,யோகி பாபு எல்லாருடைய நடிப்பும் பிரமாதம்.நல்லா இருந்திச்சு ,செம மாஸ் படம் ,தலைவர் ரொம்ப அழகா இருக்காரு,நெல்சனுக்கு ரொம்ப நன்றி .


எல்லா வயசுகாரர்களும் பார்க்க கூடியதான படம் ,பயங்கரமா கலக்கிட்டாரு .40 வருஷ நடிப்பையும் ஒரு படத்திலேயே காட்டிட்டாரு ,பிச்சு உதறிட்டாரு,எல்லாரும் தியேட்டர் போய் பாருங்க,தலைவர் லுக் வேற லெவல் ,நெல்சன் பார்த்து பார்த்து படத்தை செதுக்கியிருக்காரு ,விக்ரம் படத்தை விட சுப்பேர்ன்னு சொல்லலாம் '' என்றவாறு தங்களின் விமர்சனங்களை கூறியிருந்தார்கள்.

Advertisement

Advertisement

Advertisement