• May 07 2024

ஒரே நிற ஆடை அணிந்து டான் பட வெற்றியை வித்தியாசமாகக் கொண்டாடிய படக்குழு- குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.சமீபகாலமாக இவர் தெரிவு செய்து நடித்து வரும் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருகின்றது.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி கொடுத்த திரைப்படம் தான் டான். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ப்ரியங்கா மோகன், எஸ். ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியாகிய நாளிலிருந்து ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் பிரின்ஸ் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் டான் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக இசையமைப்பாளர் அனிரூத், சிவகார்த்திகேயன், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் ஒரே நிற ஆடையணிந்து போட்டோ ஷுட் நடத்தி இருக்கின்றனர். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement