• Apr 30 2024

தளபதி 68 படத்தில் வில்லனாக நடிக்க கமிட்டாகியிருப்பது அரவிந்த்சுவாமி இல்லையா?- நடிகர் மைக் மோன் தானா?

stella / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

இதனைஅடுத்து விஜய், இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்டது.படத்தின் சூட்டிங் சென்னையில் பாடல் காட்சியுடன் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு பிரபல நடன இயக்குநர் ராஜூ சுந்தரம் நடனம் அமைத்துள்ளார்.


பாடலுக்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனிடையே கடந்த சில தினங்களாக நடத்தப்பட்ட இந்தப் பாடலின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து படக்குழு தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் அடுத்தக்கட்ட சூட்டிங்கை நடத்தவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


இந்தப்படத்தில் நடிகர்கள் பிரபுதேவா, பிரஷாந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க கமிட்டாகியுள்ளனர். இதேபோல நடிகைகள் சினேகா, மீனாட்சி சவுத்ரி ஆகியோரும் படத்தில் இணைந்துள்ளனர். படத்தில் பிரியங்கா மோகனும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எதுவாக இருந்தபோதிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லியோ படத்தின் ரிலீசை தொடர்ந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இந்தப் படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்பபட்டது. ஆனால் தற்போது 80, 90களில் மிகப்பெரிய ஹீரோவாக நடித்து வந்த மோகன் வில்லனாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இதற்காக இவருக்கு 2 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடதக்கது.


Advertisement

Advertisement

Advertisement