• Jul 04 2026

விக்ரம் பிரபுவின் ரூட் மாறுகிறதா... அறிமுக இயக்குநரை நம்பி களமிறங்குவது ஏன்?

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் விக்ரம் பிரபு. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தும் அவர், தற்போது புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது.


இந்நிலையில், இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்க உள்ளதாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய கூட்டணி உருவாகி இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

விக்ரம் பிரபு தனது படங்களில் கதைக்கு முக்கியத்துவம் அளித்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், அறிமுக இயக்குநர் சித்தார்த் எந்த வகையான கதையுடன் இந்த படத்தை உருவாக்கப்போகிறார் என்ற ஆர்வமும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.


Advertisement

Advertisement