நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், தனது அரசியல் பயணத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் திருச்சியில் உள்ள St.அந்தோணியார் தேவாலயம் சென்ற அவர், அங்கு பக்தி உணர்வுடன் பிரார்த்தனை செய்தார்.
குறிப்பாக, தேவாலயத்தின் உள்ளே மண்டியிட்டு நடந்து சென்று வேண்டுதல் செய்தது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியது. தேர்தல் சூழலில் இந்த செயல் நடந்ததால், பலரும் இதை அரசியல் கோணத்தில் விமர்சித்தும், ஆதரித்தும் கருத்துக்களை பகிர்ந்தனர்.

இந்த நிலையில், நடிகர் ஸ்ரீமன் இதுகுறித்து அளித்த விளக்கம் தற்போது வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, “எனக்கு விஜய்யை 30 வருடங்களாக தெரியும். ஒவ்வொரு பட ரிலீசுக்கு முன்பும் அவர் கடவுளிடம் மண்டியிட்டு பிரார்த்தனை செய்வது வழக்கம்.
இது புதிய விஷயம் அல்ல; தேர்தலுக்காக மட்டும் அவர் இப்படிச் செய்வதில்லை. நான் திருவண்ணாமலைக்கு சென்று பிரசாதம் கொண்டு வந்தாலும், அதை மரியாதையுடன் ஏற்று விபூதி வைத்துக் கொள்வார். அவர் அனைத்து மதங்களையும் மதிப்பவர். அதில் குறை கூறுவது தேவையா?” என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரீமனின் இந்த கருத்துகள், விஜயின் தனிப்பட்ட நம்பிக்கைகள் குறித்து புதிய பார்வையை உருவாக்கியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த விளக்கம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், பலரும் ஆதரவு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
Listen News!