• Apr 21 2026

கௌதம் கார்த்திக் காதலுக்கு நோ சொன்ன மஞ்சுமா மோகன்.! பின்பு நடந்த சுவாரஸ்யம்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கார்த்திக்  அவர்களின் மகனாக அறிமுகமாகி, தற்போது தனித்துவமான இடத்தைப் பிடித்து வரும் இளம் நடிகர் கெளதம் கார்த்திக் , தனது திரைப் பயணத்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இயக்குநர் மணி ரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், தொடர்ந்து என்னமோ ஏதோ, ரங்கூன், தேவராட்டம், பத்து தல உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

 தனது தந்தையுடன் இணைந்து மிஸ்டர் சந்திரமௌலி படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான மிஸ்டர் எக்ஸ் படத்தில் ஆர்யா  உடன் நடித்த அவர், அந்த படத்திற்காக 97 கிலோ எடையிலிருந்து 9 மாதங்களில் தீவிர பயிற்சியால் உடல் எடையை குறைத்து சிக்ஸ் பேக் தோற்றத்தில் மாறியிருந்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.


இந்த நிலையில் தன்னுடைய காதல் மனைவி குறித்து அவர்  சுவாரசியமாக பேசிய நிகழ்ச்சி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது . அதன்படி அவர் கூறுகையில், தேவராட்டம் படத்தில் நடித்தபோது நடிகை மஞ்சுமா மோகன்  உடன் பழக்கம் ஏற்பட்டு, அது பின்னர் காதலாக மாறியது. ஆரம்பத்தில் இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டே இருந்ததாகவும், அந்த சண்டைகளே அவர்களை நெருக்கமாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தானே முதலில் காதலை வெளிப்படுத்தியபோது மஞ்சிமா மறுத்ததாகவும், பின்னர் இரண்டு நாட்கள் யோசித்துப் பிறகு தனது காதலை ஏற்றுக்கொண்டதாகவும் கௌதம் கார்த்திக் தெரிவித்துள்ளார். இந்த இனிமையான காதல் கதையை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement